Little Englandயில் ஒரு நாள்….
திட்டமிடாத பயணம் அது, சற்று சலிப்புடன் தான் ஆரம்பித்தோம். மதிய உணவின் பின் நடந்து போவதா,அதுவும் இந்த வெயிலில், என்று நடக்க ஆரம்பித்தோம் ஒவ்வொருவராக. சரியாக பாதை தெரியாது, கூகுள் வரைபடத்தின் உதவியோடு இலக்கை தீர்மானித்தோம். சிரித்து பேசி நடந்து சென்ற போது களைப்பு தெரியவில்லை. அப்போது, என்னோடு நடந்த என் நிழல் என்னை மீறி குதூகலமாக நடக்க ஆரம்பித்தது.
ஏன் இந்த ஆனந்தம், என்னை நானே கேட்டேன். நிழலும் பேச ஆரம்பித்தது,
” புதிய இடம், புதிய பாதை, புதிய முகங்கள் என அநேகமான புதியவை. இன்னும் என்னென்ன புதியை இருக்குமோ என்ற குதூகலம் தான் என்னுள். வெயிலில் நடக்க சிரமம் என்று யோசித்த போது சற்று பயந்தேன்,என்னை விட்டுச்சென்று விடுவீர்களோ என்று. ஆனால் இல்லை இதோ இப்போது நானும் உன்னோடு நடக்கிறேன். வாழ்க்கை என்பதும் இப்படித்தானே தினந்தோறும் புதியவை வந்து சேர்ந்துகொண்டே இருக்கும். திட்டமிடாத வேலைகளை ஆரம்பிக்க சில தயக்கம். நீண்ட தூர வாழ்க்கை என்ற ஒரு சலிப்பு. நடந்து தான் போக வேண்டுமா வேறு வழி இல்லையா என்ற ஏக்கம். வெயில் சுடுகிறதே,நிழல் கிடைக்காத என்ற அவா. ஆனால் அதே பாதையை நாம் ரசிக்க ஆரம்பித்தால் என்ன?” இப்படி கேட்டது என் நிழல்.
அந்த நொடி ஏதோ ஒரு மாற்றம், கரடுமுரடான பாதையும் கணமில்லாமல் தோன்றியது. பயணம் தோறும் இருபக்கத்திலும் இருந்த இயற்க்கை அழகு இதயத்தை பட்டாம்பூச்சி போல சிறகடிக்கச்செய்தது. இன்னும் இந்த பாதை நீளாதா என தோன்றியது. இப்படி ரசித்துக்கொண்டே போன போது இலக்கு இலகுவாக கிட்டியது. “Little England”ஒரு குட்டி சொர்கமாகவே தோன்றியது. அதிலிருந்த அமைதி உள்ளத்தை தொட்டது. அங்கிருந்த கட்டிடங்கள் ஆடம்பரமாக இருந்தாலும் மனதிற்கு நெருக்கமாக தோன்றியது. அங்கிருந்த ஊஞ்சலில் மனம் ஆனந்தமாக ஊஞ்சலாட ஆரம்பித்தது. இது மட்டுமா, அங்கிருந்த மலர்கள் ஒவ்வொன்றும் அழகில் எங்களை மிஞ்ச ஆள் உண்டோ என ஆளுக்காள் போட்டி போட்டுக்கொண்டது. இவ்வளவு அழகான உலகமா, இது உண்மையில் பூமி தானா என்று என் மனம் படபடத்தது. ஒரு சில நிமிட மகிழ்ச்சியின் பின்னர் கால்கள் வழமைக்கு திரும்பியது.
திரும்பிவரும் பாதை உணர்த்தியது. நாம் கடந்து செல்லும் பாதை முட்கள் நிறைந்தவையாக இருந்தாலும்,அதிலுள்ள ரோஜாவை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கை கொண்டு சேர்க்கும் இடம் சொர்கமாகத்தான் இருக்கும் என்று.
நீங்காத நிழல் சொன்ன அழகான வாழ்க்கைப்பாடம், ரசித்துக்கொண்டே கடந்து செல்வோம் இன்பங்களையும் துன்பங்களையும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தவற விடாது அனுபவித்துவிட்டால் இந்த வாழ்க்கையே ஒரு வரம் தான்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.