
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்!
மேல்மாகாணத்தில் வசிக்கும், எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
1906 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முற்பதிவினை மேற்கொள்ளுமாறு அவர்கள் கோரப்பட்டுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.