fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

வடகிழக்கு மக்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்து!!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து திருகோணமலை கரையில் இருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட (BUREVI) புரேவி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்திதுறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது.

குறிப்பாக அதன் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைப்பெய்யக்கூடும்.

இதன்போது மணித்தியாலத்திற்கு 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் பலத்து காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலங்களுக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடல் ஊழியர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது,

தற்போது கடலில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது

அத்துடன் கடல் அலையானது ஒரு மீற்றர் அளவுக்கு உயரக்கூடுமெனவும் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அசாதாரணக் காலநிலை காரணமாக ஏற்படக் கூடிய சுகாதார சேவைகளுக்காக விசேட இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதற்கமைய சூறாவளியின் போது அல்லது அதற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுகாதார தேவைகளுக்காக 070 222 222 7 அல்லது 076 1616 133 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 026 3135 888 என்ற இலக்கத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 070 6000 631 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்த முடியுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்; தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் இன்று முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹாம்பத் இதனை அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவக்கூடிய அசாதாரண காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button