ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற எந்தவொரு கொரோனா நோயாளியும் இறக்கவில்லை!
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற எந்தவொரு கொரோனா நோயாளியும் இதுவரை உடல் நலக்குறைவால் உயிரிழக்கவில்லை என ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 45 நாட்களில் 3,820 கொரோனா நோயாளர்கள் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,843 நோயாளர்கள் குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை.
நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில சுமார் 10,388 படுக்கைகள் உள்ளன என்றும் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.