fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

ஆளுக்கு ரெண்டு வாங்கும் விலையில் அறிமுகமான Honor Tab X7 டேப்லெட்!

ஹானர் நிறுவனம் கனவில் கூட எதிர்பார்க்காத விலையில் ஒரு புதிய டேப்லெட்டையும், உடன் இரண்டு லேப்டாப்களையும் அறிமுகம் செய்துள்ளது. என்ன மாடல், என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.

ஹைலைட்ஸ்:

  • பட்ஜெட் விலையில் ஹானர் டேப் எக்ஸ் 7 அறிமுகம
  • உடன் ஹானர் மேஜிக் புக் எக்ஸ் 14, மற்றும் மேஜிக் புக் எக்ஸ் 15 லேப்டாப்களும் அறிமுகம்

புதிய ஹானர் டேப்லெட்டை பொறுத்தவரை இது பக்கங்களில் மெலிதான பெஸல்லெஸ் வடிவமைப்புடன் வருகிறது, ஆனால் ஒப்பீட்டளவில் அடர்த்தியான “கன்னம்” மற்றும் “நெற்றியில்” பெஸல் உள்ளது.

ஹானர் டேப் எக்ஸ் 7 சிங்கிள் ஸ்டோரேஜ் உள்ளமைவிலும், ஒரே ஒரு நிறத்திலும் வெளியாகியுள்ளது. இந்த டேப்லெட்டின் எல்.டி.இ பதிப்பும் உள்ளது.

ஹானர் டேப் எக்ஸ் 7 ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

புதிய ஹானர் மேஜிக் புக்களை பொறுத்தவரை, விண்டோஸ் 10 ஹோம் லேப்டாப்களான ஹானர் மேஜிக் புக் எக்ஸ் 14 மற்றும் மேஜிக் புக் எக்ஸ் 15 ஆகியவை இன்டெல் 10 வது தலைமுறை ப்ராசஸர்களால் இயக்கப்படுகின்றன.

ஹானர் டேப் எக்ஸ் 7, ஹானர் மேஜிக் புக் எக்ஸ் 14 மற்றும் மேஜிக் புக் எக்ஸ் 15 விலை:

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வைஃபை வேரியண்ட் ஹானர் டேப் எக்ஸ் 7 ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.10,300 க்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எல்டிஇ வேரியண்ட்டின் விலை தோராயமாக ரூ.13,700 ஆகும். இது சிங்கிள்ஒற்றை டார்க் ப்ளூ கலர் விருப்பத்தில் வெளியாகியுள்ளது.

லேப்டாப்களை பொறுத்தவரை, ஹானர் மேஜிக் புக் எக்ஸ் 14 கோர் ஐ3 + 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது தோராயமாக ரூ.37,600 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. கோர் ஐ 5 + 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை தோராயமாக ரூ.50,000 ஆகும்.

ஹானர் மேஜிக் புக் எக்ஸ் 15 பேஸிக் மாறுபாட்டிற்கான விலை தோராயமாக ரூ.38,700 ஆகும். 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கோர் ஐ 5 வேரியண்ட்டின் விலை தோராயமாக ரூ.44,400 ஆகும்

இரண்டுமே Glacial Silver நிறத்தில் வெளியாகியுள்ளன. தற்போது வரை, ஹானர் டேப் எக்ஸ் 7 அல்லது ஹானர் மேஜிக் புக் எக்ஸ் தொடருக்கான சர்வதேச கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஹானர் டேப் எக்ஸ் 7 அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

– ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட மேஜிக் யுஐ 4.0
– 8 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
– 1,280×800 பிக்சல்கள் தீர்மானம்
– 300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
– 189 பிபி பிக்சல் அடர்த்தி
– 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
– ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 டி (எம்டி 8768 டி) எஸ்ஓசி
– மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜ் விரிவாக்கம்
– பின்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார்
– முன்பக்கத்தில் 2 மெகாபிக்சல் சென்சார்
– டோயல் பேண்ட் வைஃபை
– 4 ஜி (விரும்பினால்)
– ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5.1
– சார்ஜ் செய்வதற்கான மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
– 10W சார்ஜிங்கிற்கான ஆதரவு

 5,100mAh பேட்டரி
– அளவீட்டில் 199.67×121.1×8.5 மிமீ
– எடையில் 325 கிராம்.

ஹானர் மேஜிக் புக் எக்ஸ் 14, மேஜிக் புக் எக்ஸ் 15 அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

இரண்டு மாடல்களும் பெரும்பாலும் ஒரே அம்சங்களைக் கொண்டுள்ளன. மேஜிக் புக் எக்ஸ் 14 புல் எச்டி தெளிவுத்திறனுடன் 14 இன்ச் டிஸ்ப்ளேவையும் மற்றும் மேஜிக் புக் எக்ஸ் 15 ஆனது 15.6 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

இவைகள் 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5-10210 யூ சிபியு உடனாக 16 ஜிபி வரையிலான ரேம் மூலம் இயக்கப்படுகின்றன. இவைகள் 512 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் வருகின்றன.

ஹானர் மேஜிக் புக் எக்ஸ் 14 ஆனது 56Whr பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் மேஜிக் புக் எக்ஸ் 15 ஆனார் 42Whr பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button