மெர்சிடீஸ், போர்சே கார்களுக்கு போட்டியாக டெஸ்லாவின் ‘எஸ் பிளாய்ட்’
மெர்சிடீஸ், போர்சே ஆகிய டாப் எண்ட் கார்களுக்கு நிகராக டெஸ்லா நிறுவனம் Model S Plaid என்ற அதிவேக மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டி (Fremont)நகரிலுள்ள தொழிற்சாலையில் Model S Plaid காரை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை டெஸ்லா நிறுனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தொடங்கிவைத்தார்.
3 மோட்டார் கொண்ட டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் பிளாய்ட் கார் வெறும் 2 வினாடிகளில் மணிக்கு கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வேகத்தை அடைந்துவிடும் எனவும், இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ தூரம் வரை பயணிக்கும் எனவும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை 95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.