மே 31 வரை புதிய கட்டுப்பாடுகள்! மேலதிக விபரங்கள் உள்ளே!!
பாடசாலைகள், முன்பள்ளிகளில் 50 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுமென இன்று வெளியான சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதுடன், மேலதிக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருமண நிகழ்வுகளின் போது, மண்டபங்களின் கொள்ளவில், 50 சதவீதமானோருக்கு அனுமதி வழங்கப்படுவதுடன்,
150 பேருக்கு மேற்படாதவகையில் நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு இருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும்.தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை.சந்தைகளில் 50% நுகர்வோருக்கே அனுமதி.திருமணத்தை 150 பேருடனும், மரண நிகழ்வை 25 பேருடனும் நடத்த அனுமதி. பொது விருந்துகள், நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு தடை)
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.