![motivational story tamil](https://tamilbreakingnews.com/wp-content/uploads/2020/10/rowan-heuvel-U6t80TWJ1DM-unsplash.jpg?v=1624473575)
கரை தொடா அலையின் ஏக்கம் – ஒரு பக்க கதை
செம்மஞ்சள் மாலை வேளையில் இதமான காற்று இதயம் வருட, கடற்கரையில் கால்பதித்த நேரம் அது. விடுமுறை தினம் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அலை மோதும் படி அமர்ந்த போது, கால்களை வருடிய அலை கதை பேச ஆரம்பித்தது,
“என்னைப் பார்க்க எவ்வளவு கூட்டம், என்னை நிறைய பேருக்கு பிடிக்கும், பலருக்கு பயம். ஒரு காலத்தில் என்னைச் சூழ வாழ்ந்தவர்கள் என்னை நேசித்தார்க்கள், பலர் என்னைக் கொண்டே ஜீவித்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் மறக்க முடியாது ஒரு நாள் உதயமானது, “சுனாமி”, பலரது வாழ்வை காவுகொண்ட கொடூரனாக அனைவரும் என்னை வெறுத்த நாள். அதன் பிறகு என்னை ஆசையோடு பார்த்தவர்களை விட பயத்தோடு பார்த்தவர்கள் தான் அதிகம். காலம் செல்ல செல்ல இந்நிலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.
எது எப்படி இருந்த போதும் என் ஏக்கம் என்றாவது ஒரு நாள் கரை தொட மாட்டேனா என்பது தான், அதற்காகத் தான் நான் விடாமுயற்சியாய் அங்கும் இங்கும் அலைமோதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை சுற்றியுள்ளவர்களின் செயற்பாடால் நான் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறி மாறி பார்க்கப்பட்டேன். என்னைப் பற்றிய விமர்சணம் எப்படியிருந்தும் நான் என் முயற்சியை என்றும் கைவிடவில்லை. நிச்சயம் கரை தொடுவேன்.”
என்றவாறே கடலை நோக்கி பாய்ந்தது அலை.
அப்போது தான் நானும் ஒன்றை புரிந்துகொண்டேன். விமர்சணங்களில் அடித்துச் செல்லாது, கரை தொட வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்தால் எம் வாழ்வும் இரசனை மிக்கதாய் மாறும் என்பதை. கடலையும் கடல் அலையையும் இரசித்தவளாய் வாழ்க்கைக்கு ஒரு பாடத்தையும் கற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.