கடிதம் வரைந்த மடல் – ஒரு பக்க கதை
நீண்ட நாட்களில் பின்னர், தபாற்காரரின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்த தருணம் அது. இலட்சியம் நிறைவேரப் போகும் அந்த நாள் எதுவென்று தெரியப்படுத்தப்போகும் கடிதத்தின் வருவுக்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் யுகங்கள் போல தோன்றியது. நேரம் செல்லச் செல்ல தபாற்காரர் மீது கோபம், “இவ்வளவு நேரமாகியும் இவரை காணவில்லையே, ஏன் இவ்வளவு தாமதம்? அவ்வளவா கடிதங்கள் இருக்கப்போகிறது?” என்று எனக்குள்ளே பல கேள்விகள்.
இதோ நான் எதிர்பார்த்த அந்த நொடி கடிதம் என் கைகளைச் சேர்ந்தது. பேரானந்தத்தில் தபாற்காரருக்கு நன்றி கூறி அவரது சைக்கிளை பார்த்தால், பெரிய பொதி ஒன்று இருந்தது.
“இந்த காலத்திலும் இவ்வளவு கடிதங்கள் வருகிறதா?” என்ற என்னுடைய கேள்விக்கு, அவர் சிறு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு சைக்கிளை திருப்பியபோது, ஒரு சலசலப்பு.
“இன்று தொழிநுட்பம் எவ்வளவு வளர்ச்சியடைந்திருந்தாலும், நான் கொண்ட நம்பகத்தன்மை, நான் கொடுக்கும் நிரூபனம் வேறு யாரால் கொடுக்க முடியும்? எந்தனையோ முறைகளில் தகவல்கள் பரிமாறப்பட்டாலும், ஒரு கடிதம் தரக்கூடிய பாதுகாப்பினை அவற்றில் பெறமுடியுமா? கண்ணைக் கட்டிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நினைப்பது போல், இன்றைய தலைமுறையினரும் கையில் தொலைபேசியை எடுத்ததும் உலகமே தங்கள் கைக்குள் வந்துவிட்டதாக நினைக்கின்றனர். உங்கள் அன்றாட நலன் விசாரணையிலிருந்து நீங்கள் என்னை ஒதுக்கிவைத்தாலும், தொழில்முறை தகவல் பரிமாற்றத்தை பொருத்தவரையில் நானே இன்றும் ராஜா.
என்னை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு தெரியும் என் அருமை இன்னதென்று. ஒரு பக்கம் என்னுடைய பயன்பாடு குறைந்துகொண்டு சென்றாலும், என்னுடைய பெறுமதி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் நிச்சயம் நான் முழுமையாக அழிந்துவிட மாட்டேன்.” என்றவாறு கடிதங்கள் சைக்கிளில் சவாரியை தொடர்ந்தது.
நான் நினைத்தது தவறு, இந்த காலத்திலும் கடிதங்களா என்று ஏளனமாக நினைத்தேன், ஆனால் ஒன்றின் பெறுமதி அதிகரிக்க அதிகரிக்க, அது சாதாரணமான பயன்பாட்டில் இருந்து குறையும் என்பதை உணர்ந்துகொண்டேன்.
என்னதான் இலத்திரனியல் முறையில் தகவல்களை பரிமாறிக்கொண்டாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கடிதங்களினூடாகவே பரிமாறப்படுகிறது.
எந்தளவு புழக்கத்தில் உள்ளது என்பதைவிட எவ்வளவு முக்கியமானது என்பதிலேயே ஒன்றின் பெறுமதி அடங்கியுள்ளது. இது கடிதங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்றுணர்ந்து, கடிதம் கிடைத்த சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்தேன்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.