நீரின் கண்ணீர் – ஒரு பக்க கதை
இரவு முழுவதும் கடுங்காற்று. உறக்கமில்லாத இரவின் இறுதியில் ஆழ்ந்த நித்திரை என்னை ஆட்கொண்டது. பரபரப்பாக எழுந்து பல் துளக்கி, முகங்கழுவுவதற்காக வாளியிலிருந்த நீரை கை நிறைய அள்ளினேன். நீர் என் முகத்திலிருந்து வழிந்தோடிய போது யாரோ என் காதோரம் இரகசியம் சொல்வது போல் ஓர் உணர்வு.
மனதில் ஒரு நடுக்கம் அது என்னவாக இருக்கும் என்று மீண்டும் கை நிறைய நீரை அள்ளி முகத்தில் ஊற்றினேன். அதே இரகசிய ஓசை. என்னவாக இருக்கும் என்று வாளியை எட்டிப் பார்த்தேன். எனக்குள் ஆச்சரியம்! நீரா என்னோடு பேச எத்தணிக்கிறது? “ஆம் நானே தான்” என்றது நீரின் குரல். வாயடைத்தவளாய் நின்ற என்னிடம் தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஆரம்பித்தது நீர்.
“நான் உங்களின் வளம், பூமியின் தொடக்கம் முதலே நான் இங்குதான் வசிக்கின்றேன். நான் பல கோணங்களில் உங்களை தேடி வருகிறேன். கடல், ஆறு, நதி, ஓடை, நீர்த்தாங்கி, நீர்ப்போத்தல் என இன்னும் பல வடிவங்களில் உங்கள் கைகளுக்கு கிடைக்கிறேன். பல்வேறு தேவைகளுக்காக நீங்களும் என்னை பயன்படுத்துகின்றீர்கள்.
அவற்றை இங்கு சொல்வதென்றால் ஒரு நாள் போதாது. இப்படியிருக்க நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வதைப்பது ஏன்? என்னை உருவாக்கும் மரங்களையும் இயற்கை வளங்களையும் அழித்து அபிவிருத்தியை தேடி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? ஒரு பக்கம் என்னை பணம் கொடுத்து வாங்கி பத்திரமாக பயன்படுத்தும் ஒரு கூட்டம்.
இன்னொரு பக்கம் நான் தாரளமாக கிடைப்பதால் என்னை கண்டுகொள்ளாது வீண்விரயம் செய்யும் ஒரு கூட்டம். நான் இல்லாமல் உங்களால் முழுதாக ஒரு நாள் இருக்க முடியுமா? ஆனால் உங்கள் எதிர்கால சந்ததியினர் என்னை கானலாக மட்டும் காணும் ஓர் கொடூர நிலை உருவாவதற்க்கு நீங்களே காரணமாக அமைப்போகிறீர்கள்.” என்றவாரு கண்ணீருடன் விடை பெற்றது நீர்.
“உண்மை தானே?”, என்று என் உள்உணர்வு என்னிடம் கேட்டது. இல்லையென்று சொல்ல வார்த்தை வரவில்லை. நீரின் அருமை தெரியாது அந்த அருமையான வளத்தை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். தேவைக்குக்கூட இல்லாமல் பலரும் நீரிற்காக அழைந்துக்கொண்டிருக்கும் அதே நேரம் நாம் இங்கு நீரை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.
சமூக பொறுப்பும் இயற்க்கை மீதான அன்பும் கொண்டவர்களாய் நாம் செயற்பட வேண்டுமெனில் நீரை பாதுகாப்போம். நீரின் கண்ணீரை துடைப்போம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.