மலரோடு ஓர் நேர்காணல்…..
“ஒரு நாள் தான் வாழ்க்கை ஆனாலும் அழகாக பூத்து மடிகிறதே இந்த பூக்கள்!” இந்த ஆச்சரியத்தில் மலரோடு ஓர் நேர்காணலில் இணைந்து கொண்டார் எம் நிருபர்.
நிருபர் :- எப்படி உன்னால் முடிகிறது, ஒரே நாள் வாழ்க்கையிலும்கூட இவ்வளவு சந்தோஷமாகவும் பிறருக்கு பிரயோஜனமாகவும் இருக்க?
மலர் :- “ஒரு நாள் வாழ்க்கை என்ற குறுகிய எண்ணம் எமக்குள் கிடையாது. 24 மணித்தியாலங்கள் தான் எமது ஆயுட்காலம் என்பதை நாம் நன்கு அறிவோம். அதற்குள் எம்மால் முடிந்தவரை பிறருக்கு பிரயோஜனம் உள்ளவர்களாக வாழ முயற்ச்சிப்பது எமக்காக மட்டுமல்ல எம் எதிர்கால சந்ததியினருக்காகவும் தான். ஒரு நாள் மலரும் எம்மை பலர் பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். பலர் மாலையாக சூடுகின்றனர். பல தேனீக்கள் தேன் சேர்க்கின்றன. பலர் வீட்டுத்தோட்டத்தில் ஜொலிக்கும் எம்மைப் பார்த்து இரசிக்கின்றனர். இப்படி பிறருக்கு பயனுள்ளவர்களாக இருப்பதில் எமக்கு அளப்பெரிய ஆனந்தம். அதுமட்டுமன்றி இன்று நாம் பயனற்றவராக இருந்தால் நாளை எம் அடுத்த தலைமுறை மனிதர்களால் மறுக்கப்படும். எனவே சுயநலமற்ற வாழ்வில் திருப்தி அதிகம்.” என்று கூறியது.
உண்மை தான், மனிதனின் ஆயுட்காலம் பலவருடங்கள் என்றாலும். அதில் பிறருக்கு பயனுள்ள நொடிகள் இருந்ததா என்று பார்த்தால் நிச்சயம் அது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருக்கும். எத்தனை போட்டிகள், எவ்வளவு பொறாமைகள், பிறரின் நலனை கண்டு எரிச்சல், பிறரின் வெற்றிகளை கண்டு கோபம், மற்றவரின் பணத்தின் மீது ஆசை, தலைக்கணம், கொடூர எண்ணம் இப்படி ஒரு அழுக்கான வாழ்வினை தானே இன்றைய சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே குறுகிய மனப்பாண்மையோடு, சுயநலமாக வாழும் வாழ்வில் எதுவித நன்மையும் இல்லை என்பதை உணர்ந்துகொள்வோம். பிறருக்கு பயனுள்ள மனிதர்களாகவும், பொதுநலத்துடன் செயற்படும் மனிதர்களாகவும் வாழும் வாழ்வில் இருக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் இன்றே பெற்றிடுவோம். என்று நிருபரின் கருத்தோடு நிறைவுபெற்றது மலருடனான நேர்காணல்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.