fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

கற்போம் குழந்தையாய்!

எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் குழந்தைகளின் மழலை முகத்தை பார்த்தவுடன் அது தூசாய் பறந்துவிடும். குழந்தைகளின் சிரிப்பு கள்ளம் கபடமற்றது. பொறாமை, கோபம், துரோகம் போன்ற குணங்கள் இல்லாத குழந்தை உள்ளம் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும். இன்று எம்மில் எத்தனை பேர் இந்த உண்மையான சந்தோஷத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறோம். எம்முடனே இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது. இந்த கேள்வியை பலரிடம் கேட்டால் அதிகமானோர் சொல்லும் பதில் தான், குடும்ப சுமை, பொறுப்புக்கள், கடமைகள் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போவர். ஆனால் உண்மையிலேயே சற்று ஆழமாக சிந்திப்போமானால், சந்தோஷம் எம்மிடையே இல்லாமல் போவதற்கு எம் எண்ணங்களே காரணம்.

நடை பழகும் குழந்தை, ஒரு முறை வீழ்ந்ததற்காக சோர்ந்து போய் ஒழிந்துகொள்ளுமானால் வாழ்நாளில் அது நடக்க முடியாமலே போயிருக்குமே. எழுதப்பழகும் குழந்தை தவறாக எழுதியதற்காக வெட்கப்பட்டிருந்தால் வாழ்நாளில் அது எழுத முடியாமலே போயிருக்குமே. பிறர் தன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என்று நினைந்திருந்தால் தனக்கு எது இயலும் இயலாது என்பதை தானே அறியாமல் போயிருக்குமே. ஆனால் குழந்தை உள்ளம் இதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டது கிடையாது. இவ்வளவு ஏன் நானும் நீங்களும்கூட இப்படித்தானே இருந்தோம். இருந்தும் வளர்ந்ததும் ஏன் இப்படியான மனப்பாண்மை மாற்றங்கள் எம்மிடையே உருவெடுக்கின்றது. நூறு வீதம் நான் சரியானவன் என்று கூறும் அளவிற்கு யாரும் இங்கு சம்பூர்ணமானவர்கள் அல்ல. இந்த வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் எமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. முயற்சி செய்யாத நொடிகளை எண்ணி மட்டுமே நாம் வெட்கப்பட வேண்டும். அதுவே அவமானம். வெற்றியோ தோல்வியோ எதையும் முயற்சி செய்து பார்ப்பதில் எவ்வித அவமானமும் இல்லை. பலமுறை விழுந்தால் மட்டுமே சரியாக நடக்க முடியும்.

எனவே,எம் வாழ்வின் நடக்கும் நிகழ்வுகளுக்கும் பிறர் மீது குற்றம் சொல்வதை இனியாவது நிறுத்திவிட்டு, தோல்வி எனும் ஏணியில் ஏறி வெற்றியை நோக்கி நகரும் பயணத்தில் வீழ்ந்தால் எழ கற்றுக்கொள்வோம் குழந்தையாய். 

இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button