தனிமையும் அழகு தான்….
உலகமே இருளடையும் போது தன் வரவால் ஒளி கொடுக்கும் நிலவு, தனிமையை உணர்ந்திருக்காத என்ன?
மேடும் பள்ளமும் தன்னிடம் இருந்தாலும் உலகிற்கு ஒளி கொடுக்கும் நிலவு தனித்திருந்தாலும் அழகு தான். உலகம் இருண்டதும் ஓட்டமாய் ஓடும் நிலவு உதவிக்கு வருவதும் அழகு தான். தன்னோடு யாரும் இல்லை என்று காலங்காலமாக உணர்ந்தாலும் எதிர்பார்ப்புக்கள் இன்றி எமக்காக வரும் நிலவு அன்பில் நிறைந்த அழகு தான்.
நிலவிற்கு எதற்கு இத்தனை வர்ணனை. நிலவின் அழகை இரசிக்காத எவரும் உண்டா இந்த பூமியில். ஆனால் எம்மில் எத்தனை பேர் அதன் தனிமையை இரசித்திருப்போம். “தனிமை” இந்த சொல்லில் எத்தனை அமைதி. எமக்குள் இருக்கும் சந்தோஷம், குதூகலம், ஏக்கம், கவலை என எல்லா உணர்வுகளையும் முழுமையாக நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் நிச்சயம் எம்மோடு தனிமை இருக்க வேண்டும்.
குறை கூறவோ நிறை கூறவோ உலகமே எம்மை அவதானித்துக்கொண்டே தான் இருக்கும். தனிமையை தளுவிக்கொண்ட நிலவை போல நாமும் தனிமையை காதலிப்போமானால், எமக்குள்ளும் அமைதி பெருக்கெடுத்து ஓடும். தனிமையை போன்ற சிறந்ததொரு துணை வாழ்வில் கிடைப்பது சௌர்கம்.
இருப்பினும் தனிமையை தண்டனையாக என்னும் கலாச்சாரம் எம்மை ஆழ்ந்து கொண்டிருக்கும்வரை இது தரும் சுகத்தினை ஒரு போதும் நாம் அனுபவிக்க முடியாது. தனிமையில் எதிர்பார்ப்புக்கள் இருக்காது, இருப்பதை கொண்டு திருப்தியடையும் பக்குவம் மட்டுமே இருக்கும். அதுவே ஆனந்தத்திற்கான திறவுகோள்.
நிலவின் வெண்மை போலவே அதன் தனிமையும் அழகு தான். எமக்குள் இருக்கும் தனிமையை இரசிக்க தொடங்கினால், எம் வாழ்வும் அழகு தான்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.