நெடுந்தூரப் பயணம் வாழ்க்கை….
ஒத்திகையின்றி அரங்கேறும் நாடகத்தில் தினந்தினம் பாடங்கள் தான். வாழ்க்கை என்பது மிகவும் விசித்திரமானது. ஒருவருடைய வாழ்க்கைப் போல் நிச்சயம் இன்னொருவருக்கு இருக்கப் போவதில்லை இருந்தும் ஒருவருக்கொருவர் போட்டிக்கும் பொறாமைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு தனிநபரின் வாழ்வு, அவருடைய குடும்பம், சமூகம், வேலைச்சூழலை சார்நததாகவே இருக்கிறது. எங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையில் அடுத்தவரை பார்க்க ஆரம்பித்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கையை வாழவே முடியாது.
அதேபோல் மற்றவர் எம்மை பற்றி என்ன நினைப்பாரோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாலும் எம்மால் நிம்மதியாக வாழ முடியாது. ஐந்து விரல்களை போல மனிதர்களும் வெவ்வேறு விதமானவர்கள். நீங்கள் இன்று வாழும் வாழ்க்கை பலரின் ஏக்கம், நீங்கள் ஏங்கும் வாழ்க்கையை பலர் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். யார் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும்,ஏக்கம் இல்லாதவர் எவருமில்லை.
பணமும் பதவியும் இருக்கும் ஒருவர் சுதந்திரத்திற்காகவும் நிம்மதியான உறக்கத்திற்காகவும் ஏங்குகின்றனர். ஆனால் அவர்களை பார்த்து நாம் நினைப்பது, அவருக்கென்ன தேவைக்கு அதிகமாகவே வசதி உள்ளது, நினைத்தது நினைத்த நேரம் கிடைக்கும், எங்களுக்கு அப்படியா என்ற ஒரு ஏக்கம்.
பிறர் போடும் செருப்பு விதவிதமாக உள்ளது, என்னால் அதனை வாங்கமுடியவில்லையே என்பது உங்கள் ஏக்கம், அவன் இரண்டு கால்களாலும் ஓடி ஆடி நடந்து திரிவது போல் என்னால் முடியாமல் போய்விட்டதே என்பது கால்களை இழந்தவனின் ஏக்கம். எவ்வளவு சிறப்பானது கிடைத்தாலும் திருப்தியடையாத மனம், வாழ்நாளில் மகிழ்ச்சிக்காக ஏங்கிக்கொண்டு தான் இருக்கும். அது எமக்குள் தான் கொட்டிக்கிடக்கின்றது என்பதை உணராமல்.
பிறரின் வாழ்க்கையை பார்த்து ஏங்குவதும், எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி என்று பாட்டாய் பாடுவதும், மனிதர்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது பலனற்றது. இந்த நெடுந்தூர வாழ்க்கைப் பாதையில் பலருடைய சந்திப்புக்கள் எமக்கு பலவித பாடங்களை கற்றுத்தருகிறது. எம்மோடு இருக்கும் சகமனிதன் யார் என்பதை சொல்லித்தரும் அதேவேளை நாம் யார், எங்கள் கடமை என்ன என்பதையும் சிந்திக்க வைக்கிறது. ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டால் மனஅமைதிக்கும் சந்தோஷத்திற்கும் பஞ்சம் இருக்காது.
நெடுந்தூர பயணத்தில் நினைவுகளையும்,சோகங்களையும் புதைத்துவிட்டு. சந்தோஷங்களையும் திருப்தியையும் சுமந்துகொண்டு பயணிப்போம் இன்பமாய்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.