விதிவிலக்கு
“இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே” என்று பலர் சொல்லி கேட்டதுண்டு. ஆனால் சற்று திரும்பிபார்த்தால் தான் புரிகிறது,சரியான பாதையில் செல்வோர் சமூகத்தின் விதிவிலக்குகள் என்று. தவறாக இருந்தாலும் அது பலரால் பின்பற்றப்படும்போது அதுவே சரியான செயலாக சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சரியானதையே செய்தாலும் தனியாக செயற்படும் போது, சமூகம் அதனை பிழையாகவே கருதுகின்றது.
இன்றைய காலகட்டத்தை பொருத்தவரையில் இளைஞர்கள்,தான் ” கெட்டவன்” என்று சொல்வதில் பெருமை கொள்கின்றனர். யுவதிகள்,”Little princess” என்ற போர்வையில் வீட்டு வேலை எதுவும் செய்ய தெரியாது என்று சொல்வதில் பெருமைப்படுகின்றனர். ஒருவர் செய்த தவறிற்காக இன்னொருவர் அவரை கோபமாக திட்டும் போது சிரிப்பு வருவதாக சொல்லி,தன்னுடைய தவறை உணராத மனிதர்களாகவும்,எதிரில் இருக்கும் சகமனிதனின் உணர்விற்கு மதிப்பளிக்க தெரியாதவர்களாகவுமே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இப்படியெல்லாம் இல்லாமல்,பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,பொறுப்புள்ள ஒரு இளைஞன் யுவதியாக வாழ்வோர் இன்றைய சமூகத்தின் விதிவிலக்குகள் தான்.
பலபேர் சேர்ந்து செய்தாலும் தவறு தவறு தான்,ஒருவர் மட்டுமே செய்தாலும் சரி சரி தான் என்ற உணர்வு சமூகத்தில் எழுமாயின்,அந்த ஒரு சரியான நபருக்கு சமூகம் கைகொடுக்குமாயின்,பொய்,கொலை,கொள்ளை, ஏமாற்றங்கள்,கற்பழிப்புக்கள், தற்கொலைகள் என்று பல சமூக சீர்கேடுகள் எம் சமுதாயத்தை விட்டு நீங்கும்.
எனவே சரியானதை சரி என சொல்ல நாமும் விதிவிலக்காவோம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.