பிரிவால் நொறுங்கிய இதயமே…..
பிரிவை விட கொடியது ஏதும் உண்டெனில் அது முதுமையை நோக்கி நகரும் நாட்களே.
எனக்குள் அடிக்கடி ஏற்படும் ஓர் உணர்வு , எம்மோடு உடன் இருந்து எம்மை வழிநடத்திய பெற்றோர், ஆசிரியர்கள்,நலன்விரும்பிகள் என எம்மை சுற்றுயிருந்த உறவுகள் எம் கண்முன்னே முதுமையடையும் போது ஏற்படும் ஓர் உணர்வு,அது கவலையா? பயமா? ஏக்கமா? வலியா? எப்படி சொல்வது வார்த்தைகளால்? அது வார்த்தைகளற்ற உணர்வு. பிரிவு என்பது நிச்சயம் ஒரு நாள் வரும் என்பது யாரும் அறிந்ததே. ஆனால் முதுமையடைதல் என்பது பிரிவைவிட கொடியது. நாளுக்கு நாள் எம் கண் முன்னே பிறருக்கும், எமக்கே தெரியாமல் எமக்கும் நிகழும் ஒரு நிதர்சனம்.
பத்து மாதம் பாரம் சுமந்த உடல் இன்று சோர்வாக அமர்ந்திருப்பதை பார்ப்பதைவிட பிரிவு ஒன்றும் கொடியதல்ல. ஆரோக்கியமாக நடந்து திரிந்து எம்மை தூக்கிக்கொண்டு நடந்த கால்கள் இன்று மூட்டு வலிக்கு தைலம் இட்டுக்கொண்டிருப்பதை பார்ப்பதைவிட பிரிவு ஒன்றும் கொடியதல்ல. மழலை மொழியில் நாம் கேட்ட கேள்விக்கெல்லாம் சற்றும் சலைக்காமல் பதில் சொன்ன குரல்கள் இன்று கம்பீரம் இழந்து பேசுவதை கேட்பதைவிட பிரிவு ஒன்றும் கொடியதல்ல. நல்வழி காட்ட எம்மை சுற்றியே ஓடிய எண்ணங்கள் இன்று சுயத்தை இழந்து தன்னையே மறந்த குழந்தையாக நிற்பதை பார்ப்பதைவிட பிரிவு ஒன்றும் கொடியதல்ல.
இது எனக்குள் மட்டும் எழுந்த உணர்வா, எப்படி உயிர் கொடுப்பது இந்த உணர்விற்கு. பிரிவில் நொறுங்கிய இதயங்களே, ஒவ்வொரு நாளும் நாம் பிரிவை விட மேலான வலியைத் தாண்டி தான் வாழ்கை பாதையில் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
எம்மை நாம் உணர்ந்தால், ஒவ்வொரு நாளும் நாம் எதை நோக்கி செல்கின்றோம் என்று தெரிந்துகொண்டால்,பிரிவு என்பது தாங்கமுடியாத ஒன்றல்ல. முதுமையை நோக்கி நகரும் வாழ்வில் உணர்வுள்ள உயிர்களாய் வாழ்வோம்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.