
விரைவில் கையடக்கத் தொலைபேசிகளின் விலை உயர்வு!
அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்துவது பற்றி அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
அதன்படி கையடக்கத் தொலைபேசி (ஸ்மார்ட் போன்) குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, மின் உபகரணங்கள் உட்பட வாசனைத் திரவியங்களையும், அழகுசாதரனப் பொருட்களையும் இறக்குமதி செய்வதை அரசாங்கம் இடைநிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறை, டொலர் நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் இந்த முடிவுக்கு வரவிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மேற்படி பொருட்களின் விலைகளும், தட்டுப்பாடும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.