யாழில் கடற்கரையில் கரையொதுங்கும் மருத்துவ கழிவுகள் குறித்து நடவடிக்கைகள் தீவிரம்!
யாழ்.நயினாதீவு கடற்கரையில் ஒதுங்கியிருக்கும் மருத்துவ கழிவுகளில் உள்ள மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை என வேலணை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நயினாதீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த கடற்பரப்பில் ஒரு சில மருத்துவ உபகரணங்கள் கரையொதுங்கியது.
குறித்த மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் எந்த நாட்டினுடையது என உறுதியாக கூற முடியாவிட்டாலும் அவை இலங்கையில் பயன்படுத்தும் உபகரணங்கள் அல்ல.
ஆகவே குறித்த உபகரணங்களை பகுப்பாய்வு செய்யும் பொருட்டு கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.