fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

கண்ணுக்கு மை அழகு!

மனதில் இருப்பதை வெளிப்படையாக காட்டுபவை கண்கள். பெண்மையின் அழகை மென்மையாக வெளிப்படுத்தும் கண் மை வகைகளை இந்த தொகுப்பில் காண்போம்.மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நமது பண்பாட்டில் எதிரில் உள்ளவர்களின் கண்களை பார்த்து பேசி பழகு என்று பெரியவர்கள் கூறுவார்கள். காரணம் கண்கள் இதயத்தின் வாசல் என்று சொல்லப்படுகின்றன. மனதில் இருப்பதை வெளிப்படையாக காட்டுபவை கண்கள்.மவுனமாக அவை தெரிவிக்கும் அழகு மொழிக்கு அலங்காரமாக அமைவது கண்களுக்கு இடும் மை ஆகும். பெண்மையின் அழகை மென்மையாக வெளிப்படுத்தும் கண் மை வகைகளை இந்த தொகுப்பில் காண்போம்.

கிளாசிகோ

சமீப காலத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது இந்த கண் மை. வெஸ்டர்ன் மற்றும் செமி வெஷ்டர்ன் உடைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

சிம்பிள்

கண்கள் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தாலும் அணிந்துள்ள ஆடைகள் எவ்வகையாக இருந்தாலும் இந்த கண் மை அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

,இண்டிகோ

சற்று தடிமனாக தோற்றமளிக்கும் இந்த கண் மை, அனைத்து விதமான இந்திய கலாச்சார உடைகளுக்கும் கச்சிதமாக பொருந்தும்.

டிராமா

கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகளிலும் இடப்படும் மை. பெண்களுக்கு போல்டு லுக் அளிக்கும். இவ்வகை கண் மை வெஸ்டர்ன் உடைகளுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

கிரேகோ

பெரிய கண்களை சிறிதாக காட்ட உதவும் மெல்லிய கண் மை இது. லேசாக மேக்கப் போட்டாலும் இந்த கண் மை வகை அட்டகாசமான லுக்கை அளிக்கக்கூடியது.

எகிப்சியோ

கரு விழியை கூர்மையாகவும், கண்களை பெரியதாகவும் எடுத்துக்காட்டும் வகை இது. எகிப்து நாட்டு கிளியோபாட்ரா காலத்திலிருந்தே இந்த வகை கண்மை மிகவும் பிரபலம்.

லக்சோ

ஆசிய நாட்டு பெண்மணிகள் மட்டுமே பயன்படுத்தும் இந்த வகை கண் மை சிறிய கண்களையும் பெரிதாக காட்ட உதவுகிறது.

பெளினோ

சிறிய கண்களை கொண்டர்களுக்கு இந்த கண் மை பொருத்தமாக இருக்கும். மற்றவர்களின் கண்களை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டு.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button