மார்க் ஸூக்கர்பேர்க்கின் வெற்றிக்கதை!
எம்முடைய வாழ்வில் ஒன்றிப்போன ஃபேஸ்புக் எனும் முகப்புத்தகம் குறித்து பல விதமான எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் அதனுடைய தூரநோக்கு பலம்வாய்ந்தது. உலகெங்கும் உள்ள அனைத்து மக்களது எண்ணங்களையும் கருத்துகளையும் பதிவு செய்யக்கூடியதும் இவ்வுலகை எமது உள்ளங்கைக்குள் அடக்கவும் வழிகோலியுள்ளது.
இப்படிப்பட்ட உலகின் மிகப்பெரிய சமூகவலைத்தளத்தை ஆளுகை செய்யும் மார்க் ஸூக்கர்பேர்கின் தலைமைத்துவப் பண்புகள் மிக இலகுவானதும் செயல்வடிவில் நடைமுறைபடுத்தக்கூடியதுமாகும்.
உடனடித் தீர்மானம் என்பது நேரமுகாமைத்துவத்தின் ஒரு முக்கியமான உபாயமாகும்
மார்க் அணியும் உடை எப்போதும் ஒரேவிதமாக இருப்பதைக் காணலாம். ஏனெனில் உடை விசயத்தில் அதிகநேரத்தையோ அல்லது அதிகமான தெரிவுகளையோ வைக்கும் போது பின்னாலிருக்கும் பல காரியங்களுக்கு உடனடித் தீர்வு காண நேரமில்லாமற் போகும்.
அழகாக உடை அணிவது முக்கியம் ஆனால் அதைவிட முக்கியம் நிறுவனத்தினதோ அல்லது பணியாளர்களின் தேவைக்கு முக்கியமளிப்பதாகும். ஏனெனில் சில காரியங்களுக்கு அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கும்இஅதில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.
சில நேரங்களில் ஒரு தீர்மானம் எடுக்க முன்பு பலர் பல கூட்டங்கள், ஆலோசனைகள், திட்டவரைபுகள், புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொள்வதைக் காணமுடியும்.
இவையனைத்தும் சரியென்றாலும் எதற்கும் ஒரு கால எல்லை இருப்பது அவசியம்.அவசர உலகில் சில உடனடித்தீர்மானங்கள் தேவையாக இருக்கும்.
காரியங்களை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம்
குறிப்பிட்ட காரியம் தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் தகவல் திரட்டலோ அல்லது பகுப்பாய்வின் இறுதிமுடிவு வரை காத்திருப்பது சில நேரங்களில் வேலையை முடிக்க அதிக காலத்தை உண்டுபண்ணும்.ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரையில் பல புதிய செயலிகள் அல்லது புதிய விடயங்களை அடிக்கடி வெளியிடுவதை நாம் எமது முகப்புத்தகம் மூலம் காணமுடியும்.
அவ்வாறான விடயங்கள் நீக்க முன்னர் அல்லது இறுதித் தீர்மானம் எடுக்க முன்பு அதை அமுல்படுத்தும் போது அதிலுள்ள சரி தவறுகளை கண்டுபிடிக்கப்பட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படுவார்கள். சில நேரங்களில் நாமும் சில தீர்மானக்களை எடுக்க முன்னர் அது தொடர்பான சோதனை முயற்சிகளை எடுத்துப்பார்க்கலாம்.
புத்தாக்கம் புனைதலும் புதுவிடயங்களை முயற்சி செய்து பார்க்கவேண்டும்
மார்க் ஒரு புத்தாக்கம் புனைபவர்இ எப்போதும் தன்னுடைய குழுவை அல்லது பணியாளர்களை புது விடயங்களை முயற்சி செய்து பார்க்கத் தூண்டுபவர்.அப்பொழுதான் புது விடயங்கள் மற்றும் புதிய முயற்சிகள் தோற்றம் பெறும்.
எப்பொழுதும் பாரம்பரிய விடயங்களை அல்லது பழமையான முறைகளைப் பின்பற்றுதல் தேவையற்ற ஆபத்துகளை குறைக்கும் ஆனால் ஆர்வம் என்பது மிகக் குறைவாக இருக்கும். ஒரு பிடிப்பு இருக்காது.
எனவே புது விடயங்களை முயற்சி செய்தல் ஒரு பேரார்வத்தை ஏற்படுத்தும் மேலும் புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் எம்மைத் தொற்றிக்கொள்ளும். எனவே புத்தாக்கம் புனைதல் எம்மை எப்போதும் புதிதாகவே வைத்திருக்கும்.
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்