fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பதவியில் நீடிப்பாரா மணிவண்ணன்?-யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தோற்கடிக்க முயற்சி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திலையில் மணிவண்ணணை யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தோற்கடிக்க திரை மறைவில் முயற்சி இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. ஏற்கனவே ஒருமேலதிக வாக்கினால் வெற்றிபெற்ற நிலையில் யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் வெற்றிபெறுவதும் கடினமான சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.:

முதல்வர் வேட்பாளர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமைக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநக முதல்வர் இ.அஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்வு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாக்கெடுப்பில் ஆர்னோல்ட்டுக்கு 20 வாக்குகளும் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடத்தன.

நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர், மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button