fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 5

4. கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(c) ன் கீழான கட்டளை அரசியலமைப்பின் உறுப்புரை 21 ஐ மீறுகின்றதா மற்றும் இயற்கை நீதி விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது பற்றிய பகுப்பாய்வு

இயற்கைநீதி விதிகள் என்பது சட்டத்தினால் குறிப்பிடப்படாவிட்டாலும் நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டியனவாகும். இவற்றில் இருபுறமும் கேட்டல், பக்க சார்புக்கு எதிரான விதி ஆகியன முக்கியமானதாகும். ஆரம்ப காலத்தில் நீதி/நீதி மருவிய தீர்மானமெடுத்தலிலேயே மேற்குறித்த விதிகள் பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்ட போதும் நாளடைவில் நிர்வாக நடவடிக்கைகளிலும் இது தேவைப்படுத்தப்பட்டது.


கடவுச்சீட்டை கையகப்படுத்துவதற்காக சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை
எதேச்சாதிகாரம் மிக்கதாகவும் நியாயமற்றதாகவும் மேனகாகாந்தி கூறினார். இயற்கை
நீதியின் முக்கிய விதியான இருபுறமும் கேட்டலை இது தவிர்ப்பதாகவும் கூறினார்.
மேலும் கடவுச்சீட்டு முடக்கத்திற்கான காரணங்கள் கூறப்படாமையும் எதேச்சாதிகாரமானது என்றார்.

மேற்குறித்த வாதத்தை நீதியரசர் பகவதி ஏற்றுக்கொண்டதுடன் பின்வருமாறு
கூறியிருந்தார்.

The order impounding the passport of the petitioner was, therefore, clearly in violation of the rule of natural justice embodied in the maxim audi alteram partem and it was not in
conformity with the procedure prescribed by the Passports Act, 1967. Realising that this was a fatal defect which…………………”

இங்கு கட்டளை வழங்கபட்ட செயல் எதேச்சாதிகாரமானது என்பதை சட்டமா அதிபர்
ஏற்றுகொண்டார். மேலும் மேனகாகாந்திக்கு வாதங்களை முன்வைக்க சந்தர்ப்பமளிப்பதாகவும் உறுதியளித்தார். இதனடிப்படையில் நீதிமன்றம் இக்கட்டளை
தொடர்பில் முறையான தீர்ப்பை வழங்கவில்லை. கட்டளை வழங்குதலில் அதிகாரசபை காரணங்களை வழங்குதல் சிறப்பானதாகும் என நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
உபபிரிவு 10(5) ன் பிரயோகத்தை மிகக்குறைந்தளவில் பயன்படுத்துமாறும் கூறப்பட்டது.


5.கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(c) அரசியலமைப்பின் உறுப்புரை 14 ஐ மீறுகின்றதா என்பதுபற்றிய பகுப்பாய்வு


உறுப்புரை 14 ஆனது சட்டத்தின் முன் சகலரும் சமம் என்பதை வலியுறுத்துகின்றது.
இந்த வழக்கில் மேனகாகாந்தி கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(c) ஆனது
கடவுச்சீட்டு அதிகாரிகளுக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்குவதாக கூறினார்.
மேலும் குறித்த பிரிவிலுள்ள சொற்கள் தெளிவாக வரையறுக்கப்படாமையால்
அதிகாரசபையினர் பரந்தளவில் பொருள்கோடல் செய்வது ஏதேச்சாதிகாரத்திற்கு
வழிவகுக்கும் என வாதிட்டார். மேலும் இந்த ஏற்பாடுகளில் மேன்முறையீட்டிற்கான
ஏற்பாடுகளும் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.


நீதியரசர் இதனை மறுத்ததுடன் உறுப்புரை 14 தொடர்பான மீறல் இடம்பெறவில்லை
என கூறினார். இங்கு “பொதுமக்களின் நலன்” (Interests of the General Public) என்ற சொற்கள் தெளிவான அர்த்தத்துடன் காணப்படுவதாகவும் கூறினார். குறித்த நலன்களை தீர்மானிப்பதில் நீதிமன்றங்கள் எவ்வித சிக்கல்களையும் எதிர்நோக்கவில்லை என்றும்
கூறினார். நீதியரசர் பகவதி மேலும் பின்வருமாறு கூறுகின்றார்.

“The power conferred on the Passport Authority to impound a passport under section 10(3) (c) cannot, therefore, be regarded as discriminatory and it does not fall foul of Article 14. But every exercise of such power has to be tested in order to determine whether it is arbitrary or within the guidelines provided in Section 10(3) ”

தொடரும்

Back to top button