fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 1

அறிமுகம்

மேனகா காந்தி வழக்கானது2 இந்திய அரசியலமைப்பின் உறுப்புரைகள் முறையே 14,
19 மற்றும் 21ல் உள்ளடக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் இயற்கைநீதி
கோட்பாடுகள் தொடர்பானதாகும்.

உறுப்புரை 14ல3; சட்டத்திற்கு முன் யாவரும் சமம் என்றும் உறுப்புரை 194 வெளிப்படுத்தல் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமைகளை உள்ளடக்குவதுடன் உறுப்புரை 215 சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடி முறைகளுக்கமைவாக உயிர் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமைகளை(Protection of Life and Personal Liberty)கொண்டுள்ளனர் என்றும் கூறும்.

உறுப்புரை 21 உயிர் வாழும் உரிமை தொடர்பில் இந்திய வழக்குகளில் அதிகளவு பேசப்பட்டாலும் இந்த வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பிலே அணுகப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு முன்னர்வரை உறுப்புரை 21 ஆல் அடையாளப்படுத்தப்பட்ட உரிமைகள் நிறைவேற்று துறையின் ஏதேச்சாதிகாரமான செயல்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கியது. ஆனால் இந்த வழக்கின் பின்னராக சட்டவாக்க துறையின் எதேச்சாதிகாரமான நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பு வழங்கியமை முக்கிய அம்சமாகும்.


இந்த வழக்கின் மூலம் உறுப்புரை 21 பரந்த நோக்கெல்லையில் அணுகப்பட்டது. மேலும்
தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பில் உள்ளடங்கும் பல உரிமைகள் இவ்வழக்கில் விவரிக்கப்பட்டன. அத்துடன் தனிப்பட்ட சுதந்திரத்துடன் தொடர்புடைய சகல சட்டங்களிலும் அடிப்படை உரிமைகள் உறுப்புரைகள் 14, 19, 21 ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி பரிசோதிக்கப்படவேண்டும் என புதிய கோட்பாடு உருவாகியது. இது
தங்க முக்கோண பரீட்சை(Golden Triangle Test) என அழைக்கப்பட்டது.

மேலும் தீர்மானத்திற்கு பின்னரான கோட்பாடு (Post Decisional Doctrine)இவ்வழக்கிலிருந்து
தோற்றம்பெற்றது. இது நிர்வாக ரீதியான தீர்மானங்களின் நியாயத்தன்மையை
உறுதிப்படுத்த வழிகோலியது.


இங்கு சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடைமுறைகள் (Procedures established by Law)
நீதியானதும் நியாயமானதுமாக (Reasonable, Just and Fair) இருக்க வேண்டும்
என்று பரந்தளவில் அணுகப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் சட்டத்தின் முறையான
நடவடிக்கை (Due Process)வெளிப்படையாக உள்ளக்கப்படாவிட்டாலும் இந்த
தீர்ப்பின் மூலம் அதற்குரிய அர்த்தம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சட்டவாக்க
துறையினரால் உருவாக்கப்படும் சட்டங்கள் நீதிமன்றத்தால் கேள்விக்குட்படுத்தக்கூடிய
நிலைமையினை உருவாக்கியது.


வாதியான மேனகாகாந்தி இந்தியாவின் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர்
அக்காலப்பகுதியில் பத்திரிகையாளராக கடமையாற்றியிருந்தார். இவருக்கு 1976 ஆம்
ஆண்டு இந்திய குடியரசு கடவுச்சீட்டு கிடைத்தது. 1977ம் ஆண்டு ஆடி மாதம் 4ம் திகதி
மேனகாகாந்திக்கு டெல்லி பிரதேச கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து அவரின்
கடவுச்சீட்டை 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு தகவல் அனுப்பப்பட்டது. அதாவது
1977ம் ஆண்டு ஆடி மாதம் 11ம் திகதிக்கு முன்னராக கடவுச்சீட்டை ஒப்படைக்க
வேண்டும். இந்திய குடியரசின் 1967ம் ஆண்டின் கடவுச்சீட்டு சட்டத்தின் 10(3)(c)
உபபிரிவின6; படி பொதுநலன்(Public Interest ) கருதி இந்த கடவுச்சீட்டு முடக்கம்
மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய இறையாண்மைக்கும்
பாதுகாப்புக்கும், இந்தியா – வெளிநாடுகளின் உறவுமுறைக்கு நபரொருவரால் பாதிப்பு
ஏற்படுத்தப்படலாம் என கருதுமிடத்து கடவுச்சீட்டை முடக்கமுடியும் என மேற்படி சட்டம்
ஏற்பாடு செய்கின்றது.


இதற்கு மேனகாகாந்தி கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(5)7 ற்கமைய கடவுச்சீட்டு
அலுவலருக்கு கடவுச்சீட்டு முடக்கத்திற்கான விரிவான காரணங்களை வழங்குமாறு பதில் கடிதம் அனுப்பினார். எனினும் இந்த உபபிரிவில் காப்பு வாசகமாக, பொது நலன்
தொடர்பில் கடவுச்சீட்டு முடக்கப்பட்டால் அதற்குரிய காரணங்களை வழங்கவேண்டிய
அவசியம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சினால்
வழங்கப்பட்ட பதில் கடிதத்தில் கடவுச்சீட்டு முடக்கம் தொடர்பான தீர்மானம் இந்திய
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதெனவும் பொது நலன்கருதியே இந்த முடிவு
எடுக்கப்பட்டதாகவும் மீள வலியுறத்தப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக எவ்வித
காரணங்களும் கூறப்படவில்லை.


எனவே அரசியலமைப்பின் உறுப்புரை 14 ஆல் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமை
மீறலுக்காக உறுப்புரை 32 ன் படி இந்திய உச்ச நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவை
தாக்கல் செய்தார். இதில் கடவுச்சீட்டை முடக்கியமை மற்றும் அதற்கான காரணங்களை
வழங்காமை போன்ற அரசாங்கத்தின் செயல்களை சவாலுக்குட்படுத்தியிருந்தார். இதற்கு
மேலதிகமாக நியாயமான விளக்கத்திற்கு அழைத்து எதிர்வாதத்தை வழங்க சந்தர்ப்பம்
வழங்காமல் கடவுச்சீட்டு முடக்கப்பட்ட செயலானது வலிதற்றதாக(Void)அறிவிக்கப்பட
வேண்டுமெனவும் கூறினார். இரு புறமும் கேட்டல் (Audi Alteram Partem)இயற்கை
நீதி கோட்பாட்டில் முக்கிய கூறு என்பதன் அடிப்படையில் இது வாதத்தை
முன்வைத்தார்.


பின்னர் உறுப்புரை 21ன் படி தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை, உறுப்புரை 19(1)(a)
ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேச்சு, வெளிப்படுத்துதலுக்கான சுதந்திரம், உறுப்புரை
19(1)(g) ன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ள நடமாடுவதற்கான சுதந்திரம் போன்றவையும்
மீறப்பட்டுள்ளதாக மனுவில் உட்சேர்க்கப்பட்டது. உறுப்புரை 21 ன் படி தனிப்பட்ட
சுதந்திரமானது வெளிநாடு செல்வதற்களான உரிமையை உள்ளடக்கும் என்றும் இந்த
கட்டளை மூலம் தனது உரிமை மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தொடரும்

Foot Notes

1. Maneka Gandhi v. Union of India, 1978 AIR 597, 1978 SCR (2) 621
2 Ibid.
3 The Constitution Of India 1949: Article 14 – Equality before law:The State shall not deny to any person
equality before the law or the equal protection of the laws within the territory of India Prohibition of
discrimination on grounds of religion, race, caste, sex or place of birth
4 The Constitution Of India 1949: Article 19 – Protection of certain rights regarding freedom of speech
etc
5 The Constitution Of India 1949: Article 21 – Protection of life and personal liberty: No person shall be
deprived of his life or personal liberty except according to procedure established by law

The Passport Act 1967(India): Section 10(3)(c)- If the passport authority deems it necessary so to do
in the interests of the sovereignty and integrity of India, the security of India, friendly relations of India
with any foreign country, or in the interests of the general public
7 The Passport Act 1967(India): Section 10(5) – Where the passport authority makes an order varying or
cancelling the endorsements on, or varying the conditions of, a passport or travel document under subsection
(1) or an order impounding or revoking a passport or travel document under sub-section (3), it
shall record in writing a brief statement of the reasons for making such order and furnish to the holder
of the passport or travel document on demand a copy of the same unless in any case the passport
authority is of the opinion that it will not be in the interests of the sovereignty and integrity of India,the security of India, friendly relations of India with any foreign country or in the interests of the general
public to furnish such a copy.

Back to top button