இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் நபரொருவர் சிக்கினார்!
இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 21 வயதுடைய இளம் பெண்ணை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் பேசப்பட்டுள்ளது. பொலநறுவை பிரதேச சபைக்கான நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 15 வயதுடைய சிறுமியை இளம் பெண் என கூறி அந்த வர்த்தகருக்கு விற்பனை செய்தவரும் மெல்டா என்ற பெயருடைய கைதான குறித்த வர்த்தகரே எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரின் கையடக்க தொலைபேசியை தங்கள் பொறுப்பில் எடுத்து ஆய்வு செய்த போதே புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணை விற்பனை செய்ய இருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.