Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

காதலியின் நடனத்தால் பிரிந்த காதலனின் உயிர்!!

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (22) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த குறித்த இளைஞன் ஒரு இளம் பெண்ணுடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது காதலி அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உறவை முறித்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞன் மீண்டும் காதல் உறவை கட்டியெழுப்ப முயன்ற நிலையில் இளம் பெண் அதற்கு உடன்படவில்லை.

இதற்கிடையில், குறித்த இளைஞன் மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்க்க சனிக்கிழமை (22) சென்றபோது, ​​தன்னுடைய காதலி இன்னொரு இளைஞனுடன் நடனமாடுவதைக் கண்டு மனமுடைந்து, மைதானத்திலிருந்து வீடு திரும்பிய இளைஞன் தனது அறையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Back to top button