
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் : உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நாடாளுமன்றம் இன்று (14) கூடிய போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது