முல்லைதீவில் பயங்கரம்! மின்னல் தாக்கி 3 இளம் விவசாயிகள் பலி!!
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல்தாக்கி உயிரிழந்த மூன்று விவசாயிகளில் இருவர் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இருவர் எனத் தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு 03 ஆம் கண்டம் வயல்வெளிப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று (15) மாலைவேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வந்துள்ளது.
குமுழமுனை பகுதியனை சேர்ந்த இரு விவசாயிகளும், கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த ஒரு விவசாயியும் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்.
இரவாகியும் இவர்கள் விடு திரும்பாத நிலையில் இவர்களை தேடி உறவினர்கள் சென்றவேளை வயல்நிலத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 10.00 மணியளவில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பொலீசார் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக அறிய முடிகிறது.
உயிரிழந்த இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிட தக்கது
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.