fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

தொடர்பாடலால் தொடர்பற்று போகும் உறவுகள்!

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது பழமொழி ஆனால் அதுவே இன்று இணையத்தை பொருத்தவரையிலும் உண்மையான நிலையாக உள்ளது. இன்று 90 வீதமான உறவுகளில் விரிசல் ஏற்பட தொடர்பாடலே காரணமாக இருக்கலாம் என்பது எனது கருத்து. தொழிநுட்பத்தில் வளர்ச்சியடைந்து வரும் நாம் உணர்ச்சிகளிலும் நம்பகத்தன்மையிலும் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.
உறவுகளின் ஆரம்பம் குடும்பம், குடும்பத்தின் அடிப்படை கணவன் மனைவி. ஆரம்ப காலங்களை பொருத்தவரையில் குடும்பங்களில் கணவன் வேலைக்கு சென்று வீடு திரும்பினால் வேலைத்தளம் மற்றும் சகஊழியர்களுடனான தொடர்பு மீண்டும் அடுத்த நாள் வேலைக்கு சென்ற பிறகு தான். அதுவரை கணவன் சிறந்த ஒரு குடும்ப தலைவராக தன்னுடைய குடும்ப தேவைகள் பற்றி தேடி அறிந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார். இதனால் குடும்பங்களில் மூன்றாம் நபர் தலையீடுகள் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலை எப்படி உள்ளது, வீடு திரும்பியதும் FACEBOOK, WHATSAPP, TWITTER என உயிரற்ற தொடர்பாடலில் மூழ்கியுள்ள கணவனுக்கு வீட்டு தேவைகளை பற்றி தேட நேரமில்லை. வீட்டு விடயங்கள் பற்றி கலந்துரையாட வரும் மனைவி மீது எரிச்சல். பாடசாலையில் நடந்தவற்றை சொல்ல ஆசையாய் ஓடி வரும் பிள்ளைகள் மீது கோபம். நான்கு சுவர்களுக்குள் பேசி முடிக்கப்பட வேண்டிய விடயங்கள், சமூக வலைதளங்களில் பதிவிடப்படுவதனால் குடும்பத்தின் இரகசியங்கள் ஊரே சிரிக்கும்படி ஆகிறது. எனவே இதனால் சிதற ஆரம்பிக்கின்றது இன்றைய உறவுகள்.

மறுபுறம் அன்று கணவனின் வருகைக்காக காத்திருந்த பெண்கள் இன்று வேலைக்கு செல்லும் நிலை. இங்கும் அதே பிரச்சினை தான் வேலைத்தளம், சகஊழியர்கள் என தொடர்பாடலினுடாக ஒரு பெண்ணின் சமூக வட்டம் விரிவடைந்துகொண்டே போகும் போது குடும்பம் தூரமாகிப்போகின்றது. இதனால் உறவுகள் தொடர்பற்று போகின்றது. பிள்ளைகள் சரியாக கவனிக்கப்படாமையினால்தான் சமூகம் இன்று சீர்கேட்டினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இணையத்தோடு இணைந்த சமூக மாற்றத்துடன் ஒன்றித்துபோதல் எந்தளவு முக்கியமானதோ அதேபோல் ஒவ்வொரு தனிநபரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்தவர்களாக செயற்படல் அவசியமாகும். தன் குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிடும் நிமிடங்கள் தனிநபருக்கு தேவை என்பதை தாண்டி அதுவே உறவுகளுக்கான அடிப்படை, சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கான பள்ளிக்கூடம் என்பதை இனியாவது உணருவோம்.

இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button