இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?
பொதுவாக யோகங்கள் என்பதன் அடிப்படை புரிந்திருந்தாலும் அது எம்முடைய ஜாதகத்தில் உள்ளதா என எமக்கு பார்க்க தெரிந்திருக்காது. இந்த பதிவில் உங்கள் ஜாதகத்தை அவதானித்து,குறித்த யோகங்கள் இருக்கின்றதா என நீங்களே பார்ப்பதற்க்குரிய வழிகாட்டல்களை தருகின்றோம்.
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல் ஜாதக கட்டம் இருக்கும். அதில் “ல” என இருக்கும் கட்டம் ஒருவரின் ஜென்ம லக்கினம் என்றும், சந்திரன் உள்ள கட்டத்தை, அவரின் ராசி எனவும் அழைப்பர்.
நீங்கள் துலாம் ராசி எனின் உங்கள் ராசி கட்டத்தை பார்க்கும் போது, துலாம் கட்டத்தில் “சந்திரன்” காணப்படும்.
மேலும் நீங்கள் உங்கள் ஜாதகத்தை அவதானிக்கும் பொதுபோது விருட்சிகத்தில் குரு இருந்தால், குருவானது லக்கினத்துக்கு 6ம் இடத்தில் உள்ளது என கூறப்படும். இலக்கினத்தை 1 என எடுத்து மணிக்கூடு முள் திசையில் எண்ண வேண்டும்.
மேலும் லக்கினத்துக்கு 5,9 ம் இடங்களை திரிகோணம் என்றும் 1,4,7,10 ஆகிய இடங்களை கேந்திரங்கள் என்றும் அழைப்பர். தொடர்ந்து வரும் பதிவுகளில் மேலும் இவற்றை தெளிவுபடுத்துகின்றோம்.
தற்போது முக்கியமாக உள்ள ஒரு யோகத்தை பற்றி பார்ப்போம். அது உங்கள் ஜாதகத்தில் இருக்கின்றதா என பாருங்கள்.
குரு சந்திர யோகம்
இந்த யோகம் தனது ஜாதகத்தில் அமைய பெற்றவர்கள் பெரும் செல்வந்தர்களாக வாழ்வார்கள். வாழ்க்கையில் எந்த வித குறையும் இருக்காது. பொதுவாக 40 வயதுக்கு பின்னராக தொழில் மூலம் அதிகம் சம்பாதிப்பர். கீழ் நிலையிலுள்ள பலர் 40 வருடங்களின் பின்னர் பெரிய நிலையை அடைவர். அரசியலில் தொண்டர்களாக உள்ளோர் பெரிய அரசியல்வாதிகளாக மாறுவதுண்டு.
சந்திரனுக்கு 5ம் அல்லது 9ம் வீட்டில் குரு அமர்ந்திருந்தால் இந்த யோகம் உங்களுக்கு உள்ளது எனலாம்.
உதாரணமாக இந்த கட்டப்படி சிம்மத்தில் சந்திரன் இருந்தால், அதன் 5வது வீடாகிய தனுசில் அல்லது 9வது வீடாகிய மேடத்தில் குரு இருந்தால் இந்த யோக அமைப்பு உள்ளது.
ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டை எண்ணும் போது குறித்த வீட்டை 1வது வீடாக கருத வேண்டும். இங்கு சிம்மம் 1 வது வீடாகும். தொடர்ந்து 2- கன்னி, 3- துலாம் , 4- விருட்சிகம் , 5- தனுசு என்றவாறாக எண்ணப்பட வேண்டும்.
இன்னுமொரு யோகத்தை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இது தொடர்பில் சந்தேகம் இருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.