ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் ஜோக்கர் மால்வேர் – 8 செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யுமாறு பயனாளர்களுக்கு அறிவுறுத்தல்!
கூகுள் பிளேஸ்டோரில் உள்ள 8 செயலிகளை ஜோக்கர் மால்வேர் என்ற மென்பொருள் தாக்குவதால் அவற்றை ஸ்மார்ட் போன்களில் இருந்து உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுமாறு Quick Heal Security Labs எச்சரித்துள்ளது.
Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers , Super SMS ஆகிய இந்த 8 செயலிகளும் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன.
எனினும் இவற்றை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் அவற்றை உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு போன்களின் செயல்பாட்டை ஜோக்கர் மால்வேர் முடக்கி, பயனாளர்களின் போன், எஸ்எம்எஸ், OTP உள்ளிட்ட தரவுகளை திருடும் திறன் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.