fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மகா பாக்கிய யோகம் கொண்டவர் நீங்களா?

பொதுவாக யோகங்கள் என்பதன் அடிப்படை புரிந்திருந்தாலும் அது எம்முடைய ஜாதகத்தில் உள்ளதா என எமக்கு பார்க்க தெரிந்திருக்காது. இந்த பதிவில் உங்கள் ஜாதகத்தை அவதானித்து,குறித்த யோகங்கள் இருக்கின்றதா என நீங்களே பார்ப்பதற்க்குரிய வழிகாட்டல்களை தருகின்றோம்.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல் ஜாதக கட்டம் இருக்கும். அதில் “ல” என இருக்கும் கட்டம் ஒருவரின் ஜென்ம லக்கினம் என்றும், சந்திரன் உள்ள கட்டத்தை, அவரின் ராசி எனவும் அழைப்பர்.

நீங்கள் துலாம் ராசி எனின் உங்கள் ராசி கட்டத்தை பார்க்கும் போது, துலாம் கட்டத்தில் “சந்திரன்” காணப்படும்.

மேலும் நீங்கள் உங்கள் ஜாதகத்தை அவதானிக்கும் பொதுபோது விருட்சிகத்தில் குரு இருந்தால், குருவானது லக்கினத்துக்கு 6ம் இடத்தில் உள்ளது என கூறப்படும். இலக்கினத்தை 1 என எடுத்து மணிக்கூடு முள் திசையில் எண்ண வேண்டும்.

மேலும் லக்கினத்துக்கு 5,9 ம் இடங்களை திரிகோணம் என்றும் 1,4,7,10 ஆகிய இடங்களை கேந்திரங்கள் என்றும் அழைப்பர். 6,8,12 ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் எனப்படும்.

குறித்த ராசிக்கட்டத்தில் கிரகங்கள் உச்சம்,ஆட்சி, நட்பு, பகை எனும் நிலையில் காணப்படலாம்.

தற்போது முக்கியமாக உள்ள ஒரு யோகத்தை பற்றி பார்ப்போம். அது உங்கள் ஜாதகத்தில் இருக்கின்றதா என பாருங்கள்.

மகா பாக்கிய யோகம்

இந்த யோகம் தனது ஜாதகத்தில் அமைய பெற்றவர்கள் சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக வாழ்வார்கள். வாழ்க்கையில் பணத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இருக்காது. இவர்கள் தீர்க்காயுள் பெற்றவர்கள். அதாவது 80 வயதிற்கு மேல் வாழ்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்கள் திருப்தி காண்பார்கள். லட்சுமி கடாட்ஷம் பெற்றதால் வாழ்க்கையில் எவ்வித தடைகள் இல்லாமல் வாழ்வார்கள்.

ஆண்: சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் கும்பம், துலாம், மிதுனம், மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் இருந்து அவற்றில் ஒரு ராசி ஜென்ம லக்கினமாகவும் இருத்தல், அத்துடன் பகலில் பிறந்திருக்கவேண்டும்.

பெண்: சூரியன், சந்திரன் கும்பம், துலாம், மிதுனம்,கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் இருந்து அவற்றில் ஒன்று ஜென்ம லக்கினமாக இருத்தல். அத்துடன் இரவில் பிறந்திருக்கவேண்டும்.

உதாரணமாக இந்த கட்டப்படி சிம்மத்தில் சந்திரன் இருந்தால், அதன் 5வது வீடாகிய தனுசில் அல்லது 9வது வீடாகிய மேடத்தில் குரு இருந்தால் இந்த யோக அமைப்பு உள்ளது.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டை எண்ணும் போது குறித்த வீட்டை 1வது வீடாக கருத வேண்டும். இங்கு சிம்மம் 1 வது வீடாகும். தொடர்ந்து 2- கன்னி, 3- துலாம் , 4- விருட்சிகம் , 5- தனுசு என்றவாறாக எண்ணப்பட வேண்டும்.

இன்னுமொரு யோகத்தை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இது தொடர்பில் சந்தேகம் இருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.

Back to top button