புதிய அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது.
- ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 273 தேர்தல் சபை வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபராகவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.
- பென்சில்வேனியாவில் சில நிமிடங்களுக்கு முன்புதான் பைடனுக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு உறுதியானது.
- ஜனநாயக கட்சிக்கு ஜோர்ஜாவிலும் மெல்லிய அளவிலான முன்னேற்றம் நிலவுகிறது. அங்கு 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஆனாலும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- நெவாடா,அரிசோனாவில் பைடனுக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்துள்ளன. இங்கு காணப்படும் முன்னேற்றம், பைடன் அதிபராவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
- ஜனநாயக கட்சித் தொண்டர்கள் இடையே வெள்ளிக்கிழமை இரவில் பேசிய ஜோ பைடன், “தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றன. நாம்தான் தேர்தலில் வெல்லப்போகிறோம்” என்றார்.
- அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக ஜோ பைடன் அறிவித்துக்கொள்ளக் கூடாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். என்னாலும், அவ்வாறு அறிவித்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் தரப்பு, பல மாகாணங்களில் வழக்கு தொடுத்துள்ளது. ஏற்கனவே அவற்றுள் சில வழக்குகள் தள்ளுபடியாகியுள்ளன.