
கிளிநொச்சியில் கோர விபத்து!
கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம் போலீஸ் பிரிவில் நேற்று இரவு எட்டு மணிக்கு இடம் பெற்ற கோர விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக மரணமாகியுள்ளார்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரி மீது யாழ்ப்பாணத்தை நோக்கி பிரயாணம் செய்த வாகனம் மோதியதால் இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இவ்விபத்தில் மல்லாகம் பிரதேசத்தை சேர்ந்த நாற்பத்துமூன்று வயதுடைய சுவேந்திரன் என்பவர் மரணமாகியுள்ளதுடன் சாரதி உட்பட இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்