
இந்திய சந்தையில் அதிரடியாக அறிமுகமாகவுள்ள Jawa Electric Bike !
மின்சார வாகனங்களுக்கான தேவையும் உற்பத்தியும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு புத்துயிர் அளித்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தற்போது 2022 ஆம் ஆண்டில் ஒரு மின்சார பைக்கையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கசிந்த வடிவமைப்பு ரெண்டர்கள் மூலம் இந்த செய்தி பற்றி தெரிய வந்தது.
ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுக தேதி அல்லது நேரத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நிறுவனம் தற்போது தனது மின்சார பைக் (Electric Bike) தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் ஊகிக்கின்றன. இந்த பிராண்டுக்கு பெருமை சேர்க்கும் கிளாசிக் ரெட்ரோ வடிவமைப்பில் நிறுவனம் மின்சார பைக்கை வடிவமைக்கக்கூடும் என ஆட்டோகார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பின் அடிப்படையில் ஜாவாவின் மின்சார பைக் ஏற்கனவே இருக்கும் Jawa Forty-Two பெட்ரோல் பைக் போல தோன்றுவதாக டிசைன் ரெண்டர்கள் சுட்டிக்காட்டுகின்றன. வரவிருக்கும் எலக்ட்ரிக் பைக்கிலும் பெட்ரோல் பைக்கில் இருப்பது போன்ற அதே அப்ரைட் நிலையை ஓட்டுனர்கள் பெற முடியும்.
இருப்பினும், அறிமுகமாகவுள்ள மின்சார பைக் (Electric Vehicle) , எரிபொருள் பைக்குகள் தங்கள் எரிபொருள் தொட்டிகளைக் கொண்டிருக்கும் இடத்திற்கு கீழே ஒரு கேசில் அதன் பேட்டரியை கொண்டிருக்கக்கூடும்.
ALSO READ: Revolt RV 400 மின்சார வாகனத்தின் முன்பதிவு மீண்டும் துவங்கியது: முழு விவரம் உள்ளே
சந்தையில் புதிதாக அறிமுகமாகவுள்ள ஜாவாவின் மின்சார வாகனம், ஒரு விரைவான சார்ஜிங் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம், வாகன ஓட்டிகள் வரம்பு மற்றும் சார்ஜ் பற்றி கவலைப்படாமல், தங்கள் பைக்கை நீண்ட தூர பயணத்துக்கு தாராளமாக எடுத்துச் செல்லலாம்.
ஜாவாவைத் தவிர, ராயல் என்ஃபீல்ட் மற்றும் யமஹாவும் (Yamaha) இந்திய சந்தைகளில் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளன. உதாரணமாக, ராயல் என்ஃபீல்டின் பேரண்ட் நிறுவனமான Eicher Motors, மின்சார வாகனங்களின் ஒரு புதிய ரேஞ்சிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.