
யாழில் பால வேலை இடம்பெறும் பகுதியில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள்!
யாழ் வரணி பகுதியில் வீதியில் பால வேலை இடம்பெறும் பகுதியில் மயக்க நிலையில் இருந்து இரு இளைஞர்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்கள் தவிர வேறு வர்த்தக நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் குறித்த இருவரும் நேற்று இரவு அதிக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுபோது , வரணி- இயற்றாலை வீதியில், பாலப் புனரமைப்பு நடக்கும் பகுதிக்குள் விழுந்து மயக்க நிலையில் இருந்துள்ளனர்.
இதன்போது வீதி ரோந்தில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் அவர்களை அவதானித்து, அவசர நோயாளர் காவு வண்டியை தொடர்பு கொண்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தில் மகாலிங்கம் மகிந்தன் (28), காந்தராசா சசீவன் (22) ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிராபத்தான நிலைமையில் இருந்ததால், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.