
‘உன்னைப் போலத்தான் உன் அம்மாவும் சுப்பர் பிகர்’ என மாணவிக்கு கூறிய ஆசிரியரை அடித்த ரியுசன் ஓனர்!!
யாழ் வலிகாமம் பகுதியில் ரியூசன் வாத்தி ஒருவர் குறித்த ரியுசன் ஓனரால் மாணவர்களுக்கு முன் கடுமையாத் தாக்கப்பட்டு துரத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது, கடந்த புதன் கிழமை வலிகாமம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 9 மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்கும் யாழ் பல்கலைக்கழக வேலையில்லாப் பட்டாதாரியான 26 வயது வாத்தியாரே குறித்த ரியூசன் முதலாளியால் தாக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார். குறித்த வகுப்பில் யாழ் நகர்ப் பிரபல பாடசாலையில் கற்கும் அழகான மாணவி ஒருவர் கல்வி கற்று வந்துள்ளார். அம் மாணவியை அடிக்கடி குறித்த வாத்தியார் ‘சுப்பர் பிகர்’ என மாணவர்களுக்கு முன் வர்ணித்து வந்துள்ளார். இது தொடர்பாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்கள். இதனையடுத்து பெற்றோர் குறித்த கல்விநிலைய முதலாளிக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். இதனை கருத்தில் எடுத்த கல்விநிலைய முதலாளி தமிழ் வாத்தியாரை அழைத்து இது போல் இனி கதைக்க கூடாது எச்சரித்து அனுப்பியுள்ளார்.
மாணவியை தந்தையே தொடர்ச்சியாக ரியூசனுக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். ஆனால் கடந்த சனிக்கிழமை மாணவியின் தாயார் மாணவியை ரியூசனிலிருந்து ஏற்றிச் சென்றதை அவதானித்த தமிழ் வாத்தியார் அடுத்தநாள் ரியூசனில் வைத்து மாணவிக்கு அருகில் சென்று கேள்விகள் சிலவற்றை கேட்ட பின் ”உன்னைப் போலத்தான் உன் அம்மாவும் சுப்பர் பிகர்” என மெதுவாக கூறியதாகத் தெரியவருகின்றது. இதனை எப்படியோ அறிந்த மாணவர்கள் மீண்டும் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த புதன்கழமை வகுப்புக்கு வந்த தமிழ் வாத்தியாரை வெளியே அழைத்து குறித்த ரியூசன் முதலாளி தாக்கிய பின் அவரை ரியூசனிலிருந்து துரத்திவிட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.