
யாழில் ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!
யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ அல்லது யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சித்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
கோண்டாவில் அரசடி பிள்ளையார் கோவில் மடப்பள்ளியில் இருந்து சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
நாவற்குழியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞன், அந்த கோவிலில் வேலை செய்கிறார்.
அவரது சடலம் மீட்கப்பட்ட இடத்தில் யன்னலுடன் கைத்தொலைபேசி வைக்கப்பட்டிருந்தது.
தனது மரணத்தை அவர் வீடியோவில் பதிவு செய்யவோ, அல்லது நேரலையாக யாருக்கோ காண்பிக்கவோ முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இன்று காலையில் சடலம் மீட்கப்பட்ட போது, கைத்தொலைபேசியின் சார்ஜ் இல்லாமல் இருந்தது.
கைத்தொலைபேசியை சார்ஜ் ஏற்றிய பின்னர் ஆய்வு செய்தாலே மேலதிக விபரம் வெளியாகும்.
இதேவேளை, உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, இளைஞன் காதல் விவகாரமொன்றினால் சோகத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.