
கொழும்பு – யாழ் புகையிரத சேவை இன்று மீள ஆரம்பம்!
தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணம்-கொழும்பு புகையிரதசேவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படுவதாக யாழ் புகையிரத நிலைய அதிபர் T.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் புகையிரத சீட்டுக்களுக்காக முற்பதிவு செய்துகொள்ளமுடியும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. இன்று காலையில் உத்தரதேவி புகையிரதம் காலை 5.30ற்கு காங்கேசன் துறையிலிருந்து கொழுப்பு நோக்கி புறப்படவுள்ளது.