யாழ்ப்பாண விமானநிலையம் மூடப்படுகின்றதா?
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படும் நிலைமையில் உள்ளதாக இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற விமான நிலையம் ஊடாக இடம்பெற்ற விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கைக்கமைய இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் 130 விமான பயணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 4325 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு இடையில் 60 விமான பயணங்களில் 906 பயணிகள் பயணித்துள்ளனர்.
விமான நிறுவனத்தினால் அனுமதி பத்திரத்திற்கு அறவிடப்படும் பணம் குறைக்காமை, பயணிகளின் பொருட்களுக்கு தடை விதித்தல் மற்றும் விமான நிலைத்தில் வரிப்பணம் குறைக்காமை ஆகிய காரணங்களால் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மக்கள் நிராகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக கொரோனா பரவல் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை பயணிப்பதற்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் விமான நிலையத்தில் பொதுவான சிக்கல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.