
யாழ்ப்பாணத்தில் திருமண வீட்டில்நடந்த சிக்கல்!
சாவகச்சேரிப் பகுதியில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுரைகளை மீறி திருமணம் நடத்தப்பட்டமையால், திருமண வீட்டாரை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரிப் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு 50 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
வெளிமாவட்டத்தவர்கள் கலந்து கொள்ள முடியாது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனும் நிபந்தனைகளுடன் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.எனினும், அதனை மீறி திருமண நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் உரிய சுகாதார விதிமுறைகளையும் பேணத் தவறியுள்ளனர்.அதனால், திருமண வீட்டாரை தனிமைப்படுத்தவும், திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.