பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து ராக்கெட்வீச்சு-பலி எண்ணிக்கை உயர்வு!
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தேவையானவரை தொடரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நேற்று நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்களின் கட்டடங்கள் தரைமட்டமாகின.
காஸா பகுதியைத் தொடர்ந்து மேற்குக் கரை பகுதியிலும் இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதுநாள்வரை நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 41 குழந்தைகள் உள்பட 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் போராளிகளுக்கு ஈரான் தனது ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.