கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்களுக்கு ஒரு டோஸ் ஃபைசர் போதும்? -ஆய்வில் தகவல்!
ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டால் அவர்களுக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் சிக்காகோ ரஷ் பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோய்எதிர்ப்புத் துறையினர் நடத்திய இந்த ஆய்வில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, இந்த தடுப்பூசியின் ஒரு டோசை போட்டால், கொரோனா ஆன்டிபாடிசுகள் அதிக அளவில் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் IgG எனப்படும் இம்யூனோகுளோபின் அளவும் முதல் டோசுக்குப் பிறகு அதிகரிப்பதாக தெரிவத்துள்ள ஆய்வாளர்கள், இரண்டாவது டோசால் அது அதிகரிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.