சற்றுமுன்: மாகாணங்களுக்கிடையில் பொதுப்போக்குவரத்து மீள ஆரம்பம்!
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சேவையாளர்களுக்காக எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான போதுமான அளவு பஸ் மற்றும் புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தேசிய கொரோனா கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்தைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,.
அதற்கமைய, மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளிடம் சேவை அட்டை, நிறுவன பிரதானியின் கடிதம் என்பன கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், இந்த நிபந்தனையை பின்பற்றுவதற்கு தேவையான சகல ஆலோசனைகளையும் பஸ் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.