
போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!
பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் ரயில் சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண இதனைத் தெரிவித்துள்ளார்.
ரயில் சேவையின் போது, கடந்த காலங்களில் மாகாணங்களுக்கிடையே பின்பற்றப்பட்ட முறையே இந்த தடவையும் பின்பற்றப்படவுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி காலை பயணத்தடை தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணத்தடை அமுலாகும்.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தும் நிலவும்.
இந்நிலையில் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.