
சிறைக்குள் கணவன்! யாழ்ப்பாண விடுதியில் சட்டத்தரணியுடன் சிக்கிய மனைவி!
பணமோசடி வழக்கு ஒன்றில் விளக்கமறியலில் சிறையில் இருக்கும் ஒருவனின் மனைவியுடன் அவனுக்காக நீதிமன்றில் வாதிட்ட சட்டத்தரணி யாழ் கச்சேரிப்பகுதியில் உள்ள விடுதி அறையில் அவனது மனைவியுடன் தங்கியுள்ளார் .
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. சட்டத்தரணியும் விளக்கமறியல் கைதியின் மனைவியும் விடுதி அறையில் நிறை வெறியில் இரவிரவாகக் கூத்தடித்ததாக விடுதிப் பணியாளர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சட்டத்தரணி தனது காரில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டி வந்து விடுதி அறையில் தங்கியுள்ளார். வெளியே இருந்து கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சாராயத்தை குடித்த குறித்த பெண் நள்ளிரவின் பின் அறைக்குள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அதிகாலை 4 மணியளவில் சட்டத்தரணி தனது காரில் எஸ்கேப் ஆகிவிட்டதாகத் தெரியவருகின்றது. நிறை வெளியில் அரை குறை மயக்கத்தில் இருந்த குறித்த பெண்ணை அங்கிருந்து மீட்ட பணியாளர்கள் அப்பெண்ணை விசாரித்த போதே தான் விளக்கமறியலில் இருக்கும் ஒருவனின் மனைவி என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வழக்காளியுடன் சமரசப் பேச்சுக்கள் நடத்த தன்னை கூட்டி வந்ததாகவும் ஆனால் வழக்காளி சட்டத்தரணியை சந்திக்க மறுத்ததால் நேரம் ஆகிவிட்டது என கூறி தன்னை
இந்த விடுதியில் ரூம் எடுத்து தங்க வைத்ததாகவும் குறித்த பெண் விடுதிப் பணியாளர்களுக்கு கூறியுள்ளார்.
குளிர்பாணம் என தனக்கு கொக்கோ கோலாவுக்குள் சாராயத்தை வார்த்து தந்து தன்னை இவ்வாறு மயக்கிவிட்டதாக குறித்த பெண் விடுதிப் பணியாளர்களுக்கு கூறியுள்ளாள்.
ஆனால் எற்கனவே சட்டத்தரணியின் நட்பு என கூறி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் குறித்த விடுதி ரூமை பதிவு செய்து பணமும் கட்டியதாக விடுதிப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.