கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கர்ப்பிணி தாய்மாருக்கு தடுப்பூசி செலுத்தும் விசேட வாரம் இன்று ஆரம்பமாகின்றது. தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்திருக்கும் தாய்மார் இவ்வாரம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், இதுவரை 27 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 850 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.