
பதிவு திருமண கட்டணம் அதிகரிப்பு!
திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, சாதாரண திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில் இருந்து 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.