அரசாங்க ஊழியர்களுக்கான முக்கிய தகவல்!
அடுத்த வாரம் முதல் மீண்டும் வழமையான முறையில் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அரச சேவையை மீண்டும் வழமையான முறையில் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மிகவும் துரிதமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த வாரம் மீண்டும் வழமையான முறையில் அரச சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது கடந்த 10ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றரிக்கைமையவே அரச ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசியமான முறையில் குறைந்த பட்ச ஊழியர்கள் மாத்திரம் அழைப்பதற்கு நிறுவனங்களின் பிரதானிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய அறிவித்தல் வரும் வரை பழைய சுற்றரிக்கைக்கமைய செயற்பட வேண்டும் என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.