fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

உதட்டிற்கு திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்தினால்…

உதட்டுக்கு அழகு சேர்க்கும் லிப்ஸ்டிக் புதுப்புது பரிணாமங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. திரவ வடிவிலான லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதற்கு பல பெண்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் இவை நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.

நிறமும் மங்காமல் இருக்கும். நேர்த்தியாக காட்சியளிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. ஒரு கோட்டிங் தேய்த்தாலே அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இருப்பினும் இந்த உதட்டு சாயத்தை பயன்படுத்துவதற்கு கண்ணாடியும், பொறுமையும் தேவை. மற்ற உதட்டு சாயத்தை போல் ஐந்து விநாடிகளில் இதனை பயன்படுத்த முடியாது. அவசரமாக உபயோகித்தால் முறையற்ற அவுட்லைனரை கொடுக்கலாம். அவுட்லைன் கொடுப்பதற்கு சிறிது அவகாசம் தேவைப்படும்.

மேலும் திரவ லிப்ஸ்டிக்கை உதட்டில் மட்டும் பூசினால் அதன் அழகு வெளிப்படாது. முகத்திற்கும் நன்றாக ஒப்பனை செய்ய வேண்டும். முதலில் உதடுகள் மீது பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொள்ள வேண்டும். பின்பு மற்ற மேக்கப்புகளை முடித்துவிட வேண்டும். அதன் பிறகு லிப்ஸ்டிக் உபயோகிப்பது உதட்டின் உலர் தன்மையை கட்டுப்படுத்த உதவும்.

உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு உதட்டை ஒன்றோடு ஒன்றாக உரசி விடக்கூடாது. ஏனெனில் திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் பொலிவு பாதிப்புக்குள்ளாகும். முதலில் கீழ் உதட்டில் லிப்ஸ்டிக்கை பூசி விட்டு அது உலர்ந்த பிறகு மேல் உதட்டில் போட வேண்டும்.

திரவ லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நீடித்திருப்பவை என்பதோடு அதற்கு பராமரிப்பும் தேவையில்லை. ஒருமுறை தடவிக்கொண்டால் போதும். பின்பு அதனை சரி செய்ய வேண்டியதில்லை. மீண்டும் லிப்ஸ்டிக் பூச வேண்டியதில்லை.

முதல் முறையிலேயே உதடுகள் ஜொலிப்புடன் காட்சியளிக்கும். மேலும் திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீண்ட நேரம் நீடித்திருப்பதோடு உலர் தன்மையும் கொண்டவை. அதனால் எளிதாக அவற்றை அகற்றிவிட முடியாது. எப்போதும் கைவசம் லிப்ஸ்டிக் ரிமூவர் வைத்திருப்பது நல்லது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button