
மனைவியை கொலை செய்தவருக்கு மரணதண்டணை!
காதலர் தினத்தில் தனது மனைவியை கொலை செய்த ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று (18) தீர்ப்பளித்தார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருக்கு இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018.02.14 ஆம் திகதி கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தமை தொடர்பில் சட்டமா அதிபரினால் 2019.04.12 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகளும், அதற்கான தொகுப்புரைகளும் நிறைவு செய்யப்பட்டதையடுத்து இன்றைய தினம் குறித்த வழக்குக்கான தீர்ப்பு திறந்த நீதிமன்றில் எதிரி மற்றும் அரச சட்டத்தரணி, முன்னிலையில் வாசித்து காண்பிக்கப்பட்டது.
குற்றச்சாட்டில் குற்றவாளியாக இணங்காணப்பட்டதையடுத்து குறித்த நபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.